கன்னம் சிவக்க சின்னம் வைத்தேன்
என் சித்தம் சிறகடித்து மேகம் சென்று சேர்ந்தேன்....
பூ முடித்தப் பெண்ணே உன் போல் தேவதையும்
பூவுலகில் தான் வந்ததுண்டா?
தேவ லோக இந்திரனின் கண்ணில் நின்று
தப்பி என்னுடன் சென்றதுண்டா?
உன்னுருவம் கண்டு பிரமை கொண்டு நின்று
தினம் பொழுதும் சென்று விடிவும் இன்றி என் வாழ்வும் எங்கு போனது...


