அருமையான படம். ஒரு திறமையான இயக்குனராக, கதை சொல்லியாக மணிகண்டன் தன்னை முதற்படத்திலேயே நிலைநாட்டியிருக்கும் காரணம் பார்வையாளரின் அறிவை ஓரளவுக்காவது மதிப்பதினால் மட்டுமே. "என்னதான் முட்டை வெள்ளையாக இருந்தாலும் உள்ளேயிருப்பது காக்க தானே" என்று கூறும் உலகிற்கு "காக்க-ன்னா மட்டும் கொறச்சலா?" என்று அதட்டலாக கேட்கும் குரல் தான் படத்தின் நேர்முகமான தோரணை. அனால் இதை விட என்னை கவர்ந்தது படத்தில் பகிரங்கமாக வெளிப்படாத குறிப்புகள். பணத்திற்கும் துட்டுக்கும் உள்ள வேறுபாடு. திடலுக்கும் பூங்காவிற்கும் உள்ள வேறுபாடு. பொருளாதரத்திற்க்கும் சமத்துவத்திற்கும் உள்ள வேறுபாடு.
நகரத்தின் நடுவில் பட்டா இடப்படதா நிலம். அதில் ஒரு மரம். அது அருகிலுருக்கும் குப்பத்து சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் விளையாட்டுத் திடலாக திகழ்கிறது. சுற்றுமுள்ள அடுக்குமாடி கட்டிடவாசிகளின் பிள்ளைகள் அங்கே விளையாடுகிறார்களா என்றால் இல்லை. அவர்களுக்கும் சறுக்கும், ஊஞ்சல்களும் நிறைந்த ஒரு தனி பூங்கா. உறக்கச் சொல்லாமலே "பூங்கா யாருக்காக கட்டப்பட்டது?" என்ற கேள்வி முன் நிற்கிரது. ஒரு கடை முதலாளி அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் கையில் போட்டுக்கொண்டு நிலம் வாங்குகையில் யாருடைய "இடம்" பறிபோகிறது என்றும் புரிகிறது.
சிறுவன் ஒருவனுக்கு கடை ஊழியரால் ஓர் அநீதி இழைக்கப்படுகிறது. அதைப்படம்பிடித்து வயதானவர், ஊடகம், பிரசார பீரங்கிகள் என்று அனைவரும் காசாக்குகிறார்கள். ஓர் ஊடக சர்ச்சைக்கு நடுவே ஒருவர் பிரச்சனையின் அடித்தளமான சாதியை பேச முற்படும்பொழுதெல்லாம் விளம்பர இடைவேளைக்காக அவரை நிறுத்திவிடுகிறார்கள். பிரச்சனையை நிறைவு செய்ய கடை முதலாளி உபயோகப்படுத்தும் யுக்தி கிட்டத்தட்ட நாம் இன்று சாதியை எதிர்கொள்ளும் விதத்திற்கு சரியான ஒப்பீடு. அடிப்படைப் பிரச்சனையை தீர்வு செய்வதில்லை. அநீதி இழைக்கப்பட்டவனுக்கு பெரிதாக பிரயோஜனமில்லை. நடுவில் மாட்டிக்கொண்டு தவிப்பவர்களுக்கு (கடை ஊழியர்கள்) அவர்களது கதியே தெரியாமல் எப்படியாவது அடிப்படைத் தேவைகள் போகாமலிருந்தால் போதும் என்று இருந்துவிடுகிறார்கள்.
சிறுவர்களின் உலகத்தை சித்தரிக்கும் கதைகளிலோ திரைப்படங்களிலோ அவர்களுக்கு உரிய முன் மாதிரிகள் இருக்கிறார்களா என்று நான் எப்பொழுதும் தேடுவதுண்டு. இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, இல்லையென்றால் படமோ கதையோ மோசமானது என்றும் இல்லை. அனால் அது இருந்தால் தான் அக்கதை முழுமை அடைந்தது போல் எனக்குத் தோன்றும். சின்ன காக்கா முட்டைக்கும் பெரியவனுக்கும் இங்கே பல முன் மாதிரிகள் உள்ளார்கள் - சிறையில் இருக்கும் தகப்பன், சில்லறையே குறியாய் நைனா, சிநேகமான அம்மா, செல்லாக்கசான பல குடிகாரர்கள் என்று பலர் இருந்தாலும் எங்கோ குழந்தை உள்ளம் மாறாத அந்த பழரசமாக அவ்விருவரும் ஆக வேண்டுமெனவே மனம் விரும்புகிறது.

No comments:
Post a Comment