ஊரை விட்டே ஓ ஓர் குடிசை
அங்கே யார் செய்து போட்டு வைத்தார்
காதலிலே ஓர் பைத்தியமே
சொர்க்கம் இதுவென்றே கட்டி வைத்தார் - சேது
எனது இருபத்தி ஓராவது வயதில் நான் ஒரு இளைஞனை கொன்றேன். இல்லை அவன் இறக்க மறுக்கின்றான். அவனுக்குண்டான காயம் என்ன மாயமோ தெரியவில்லை மறைந்துவிடும். 'எனக்கு சாவே இல்லை' என்பவனை பதுக்கிவிடுவது தானே முறை! அவன் ஏட்டுச் சுரக்காய், நிஜத்திற்குதவாதவன். அதனால் ஒளித்து விட்டேன். காரணம் - அவன் பித்துப் பிடித்தவன். சமூகம் அந்த பித்தத்திற்கு வைத்திருந்த பெயர் 'காதல்'. ஆனால் அவன் கொண்டிருந்ததோ மனிதர் உணர்ந்து கொள்ளாதது, புனிதமானதென்பதே அவன் நம்பிக்கை. அவன் கொண்ட உணர்ச்சியின் உத்தேசம் காமம் அல்ல என்பதே அவனை அவ்வாறு நம்பச் செய்தது. ஆனால் அவனுக்கு பிடித்ததல்ல, உலகத்துக்கு பிடித்திருந்தது தான் பைத்தியம் என்று உரக்க சாட்சி சொல்ல ஓர் 'அபிராமி' கிடைக்கவில்லை. அவள் நிஜமல்ல என்று இன்றும் நம்ப மனம் இடம் கொடுக்கவில்லை. அதனால் தானோ என்னவோ அந்த கொலை முயற்சி தோற்று பதுக்கி வைத்தலில் சென்று முடிந்தது.
I’ll Have What They’re Smoking
14 hours ago
8 comments:
அபிராமி'க்கு புரியும் என்பதே ஒரு மிகைநம்பிக்கை தானோ ? புரிந்துகொள்பவர் அபிராமி என்று definition-ஐ தளர்த்திக்கொள்ளலாம். அப்படியும் கஷ்டம் தான் என்கிறான் ஒரு இருபத்தைந்து வயதினன். பெரும்பான்மையுடன் தன்னை இணைத்துக்கொண்டு.
நத்தையின் மென்னுடலைக் காக்கும் உறுதியான கூடு அதன் உமிழ்நீரிலிருந்து உருவாகிறதாம். நத்தையும் உலகத்தைப் பார்த்து உமிழ்ந்து, உருமாறி தன்னைக் காத்துக்கொள்கிறது போலும்.
As always pardon the tangent. Always interested in a little peeping, so I hope this is a series :-)
புரிதலும் உணர்தலும் வேறல்லவோ. 'அபிராமி'க்கும் அபிராமிக்கும் மனிதனுக்கும் மய்யக் கருத்துக்கும் உள்ள வித்தியாசம் (the difference between a person and an ideal). As Adele Lack said "everyone disappoints you the more you get to know them". Appointed and Criterion satisfying AbirAmis are no exception. :)
Lovely. Raja-vum, Kamal-um, emotions-in endha depth-ku sendru adikkirargal enbadhu marubadiyum pulanaagiradhu.
Plum,
அவர்கள் விளையாடும் தளமான அடியின் பிரதிபலிப்பு தானே இந்த வார்த்தைகள். வந்தமைக்கு நன்றி.
This is a quibble I haven't found an suitable answer to satify myself.
Guna, the virgin, wants a marriage ( kalyanam+union?) with Abiramani beyond the corporeal.
Adi Sankara, loved his Devi so that his songs and verses eulogised her physical fullness-perhaps he knew as a monk his mind worked overtime over an impossible physical union.
Interesting Complicateur. Your pieces in Tamil and your fondness for Raja especially. You have a calming space here.
Best
Maami! Does this mean the sabbatical is coming to a close?
In the case of guNA the wedding is the ultimate consummation, what more can exist for someone who considers the physical despicable?
Thanks for visiting and for the comments. I must say I am intrigued as to why you find it calming.
well a lot of good music and interesting thoughts make it calming and for restful reads.
Cheers
Ok, in hindsight it seems like I was fishing... Thanks Maami (though credit for the music wil of course go to RAjA)!
Post a Comment