கட்டமைப்பு என்பது மனிதனின் உடன் பிறந்த ஒன்றாகிவிட்டது. பிறப்பும் அது தரும் உறவும், உறவின் விரிவான குடும்பமும், குடும்பங்களின் கூடாரமான சமூகமும் சோர்வடைந்த மனிதனுக்கு ஒரு கற்பனை ஊன்றுகோலாக (உபயம் திரு.கமலஹாசன்) இருந்து கொண்டே இருக்கின்றன. கட்டமைப்பென்றாலே அதை சார்ந்த 'நுழைவுக் கட்டணம்', 'பராமரிப்புச் செலவுகள்' மற்றும் அதை சார்ந்த 'சலுகைகள்' ஒரு வாடிக்கையாளனுக்கு வந்து சேர்ந்து விடுகின்றன. குறிப்பாக ஒரு தமிழ் சூழலில், சற்று முன்பு அறிமுகமானவர்களைக் கூட மாமன் மச்சான் உறவு கொண்டாடுவது நடைமுறையான சூழலில், இது மிகவும் பொருந்தும். ஆனால் கட்டமைப்பின் கட்டணச் செலவு சிலரிடம் பிறப்பிலே பறித்து விடப்படுகிறது. கட்டமைப்பின் விதிமுறைகளில் அடங்காதவர்களுக்கு, அதன் தளங்களை எட்டாதவர்களுக்கு ஒரு விளிம்பில் இட ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது. இதை கூறுவதே சமூகம் எனக்கு அளித்த சலுகை என்றும் எனக்கு மிகத் தெளிவாக தெரிகிறது.
"விளிம்பு நிலை மனிதர்கள்". நான் கடவுள் படம் பார்த்த அனைவரின் நாவிலும் ஒட்டி விட்ட மூவார்த்தை வாசகம். கட்டமைப்பின் ஒரு பங்காக இருக்கும் சாதாரண பார்வையாளனான எனக்கு இம்மனிதர்களைக் கண்டு அருவருப்போ, பரிதாபமோ உருவாவது ஆச்சர்யத்திற்கு உரிய ஒரு எதிர்வினை அல்ல. ஆனால் அம்மூவார்த்தை வாசகத்தின் முதல் இரண்டு வார்த்தைகளை ஒட்டி மட்டுமே படம் இல்லாமல் இருப்பது பாலாவின் திறமை. விளிம்பில் வாழ்பவர்களின் வழியே எனது கட்டமைப்பின் மாயையை உணர்த்திவிடவும் அவர் தவறவில்லை.
"பெத்த தகப்பனா?"
"இல்லை"
"பின்ன உடு சனியன், என்னையும் உன் அப்பனா நெனச்சுக்கோ!"
எவ்வளவு அர்த்தம் இந்த வரிகளில். அந்தப் பெரியவர் தான் எத்தனை புத்திசாலி. பிரப்புறவுக்கு பதில் ஆகிவிட முடியாதென்றும், மற்ற எதுவும் மனது சார்ந்த ஒன்றே என்றும் உணர்ந்த ஒரு கூர்முனைக் கேள்வி பதில் (முருகனின் 'தாலி கட்டிய மனைவி' மற்றொரு எடுத்துக்காட்டு). வாயெல்லாம் சிரிப்பாகி நம்மையும் சிரிப்பில் அரவணைக்கும் அந்த சிருவனாகட்டும், கபடமற்ற சிரிப்பால் நம்மை அரவணைக்கத் தூண்டும் அந்த சிருமியாகட்டும், அவர்களது 'விளிம்பு நிலை' முத்திரையை பாலா முழுவதுமே விலக்கிவிடுகிறார். அதற்கு அவருக்கு நன்றி உரைத்தாயின் நன்று. இவ்வாறே நாம் வெளியாட்களாகக் காணும் இவர்களின் உள்ளும் உறவும் சமூகமும் உருவாகுவதையும் காட்டுகிறார்.
எவ்வளவு கட்டமைத்தும் சில காரியங்கள் கை கூடாமல் போனதற்கு காரணம் தேடி கடவுள், விதி போன்ற ஆக்கங்களை உருவாக்கி அனுசரணை மிகுந்த ஒழுக்கவாதிகளாலும், எதிர்வினை கூருபவர்களாலும் தன்னை நிரப்பிக் கொண்ட சமூகத்தில் 'நான் கடவுள்' என்று பறை சாற்றும் கைவல்யன் தான் உண்மையில் தனியன். ருத்ரன் ஒரு அகோரியின் உதாரணம் என்பதை விட, அதன் உச்சம் என்றே கூறத் தோன்றுகிறது. அவனைப் பற்றி யோசிப்பதில் ஐயங்களே மிஞ்சுகின்றன. உறவுகள் அனைத்தையும் நிராகரிக்கும் அவனுக்கு குருவின் மீது ஏன் பிடிப்பு?
கடவுளும் உருவமும்
படைப்பு எப்பொழுதும் படைத்தவன் உருவத்திலே இருந்து விடுவது வழக்கம். ஆக்கத்தின் காலம் கடந்து போயின் படைப்பு எது என்றும் படைத்தவன் எவன் என்றும் பிரித்தல் மிகக் கடினமாகி விடுகிறது.
மாங்காட்டு சாமியின் மலைக்கோயிலின் அடிவாரத்தினின்று அதன் சந்நிதி வரை கிருஷ்ணன், சிவன், முருகன் என்று உடை தரித்த பல உருப்படிகள். சந்நிதிக்குள் உருவம் மாறாத உருப்படியாய் மாங்காடுச் சாமி. உருவம் மாறிய உருப்படிகளின் உருவம் மாறாத உருப்படிக் கடவுள். பைபிள்-இன் ஜெனிசிஸ் புத்தகத்தில் கூறுவது போல் கடவுளும் அவனை வணங்குவோரின் உருவத்தில் தான் இருக்கிறான்.
ருத்ரன் மலையில் இவரை விட உயரிய நிலையிலே வசிக்கிறான். கடவுள் மனிதனின் உருவத்தில் இருக்கும் நம்பிக்கையின் உச்சமே நான் கடவுள் என்ற நம்பிக்கை என்று பாலா கூறுகிறாரா?
I’ll Have What They’re Smoking
14 hours ago
4 comments:
The bit about nuzhaivu kattaNam and parAmarippu selavugaL reminds me of the epigraph to AKR's poetry collection "Relations". He quotes his translation of a Kurunthokai poem that ends with the lines:
one may run,
escape.
But living
among relations
binds the feet.
But to muse so, is itself, as you rightly say may be a luxury afforded by the structure.
To be less tangential, I will have to watch the movie and re-read your post.
தொடர்ந்து தமிழில் எழுதுங்கள்.
dagalti: முயற்சிக்கிறேன். ஒரு சிறுகதை அங்கலாய்த்துக்கொண்டிருக்கிறது.
>>மாங்காட்டு சாமியின் மலைக்கோயிலின் அடிவாரத்தினின்று அதன் சந்நிதி வரை கிருஷ்ணன், சிவன், முருகன் என்று உடை தரித்த பல உருப்படிகள். சந்நிதிக்குள் உருவம் மாறாத உருப்படியாய் மாங்காடுச் சாமி. உருவம் மாறிய உருப்படிகளின் உருவம் மாறாத உருப்படிக் கடவுள். >>
That was a brilliant observation. Made an interesting read! Thanks for sharing.
Aravindan: Welcome to the blog. Thanks for the comment!
Post a Comment