மகாநதியில் நதியும் நீரும் பல குறியீடுகளை கொண்டது. அவை பற்றி சில யோசனைகள் :
தெளி நீரும், கழிவு நீரும் கிராம வாழ்க்கைக்கும் நகர வாழ்க்கைக்கும் ஒரு பொதுமையான உவமையாகவே எனக்கு முதலில் தோன்றியது. ஆனால் யோசித்து பார்க்கும் பொழுது அந்த உவமை சற்று எளிமையான (simplistic) கருத்து . காவிரிக்கரையில், தனது குக்க்ராமத்தில் (இங்கு கிராமம் மட்டுமே குக்) கிருஷ்ணசுவாமி என்பவன் பெரிய வீட்டு பிள்ளை. பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் பெரிய நண்பர் வட்டாரம் உடையவனாகவும் அதற்க்கு தலைவனாகவும் இருந்திருப்பது சாத்தியம். அதன் பின் அழகான மனைவி (திரையில் தோன்றாமலே மனதை கவர்ந்த கதாபாத்திரம் ஒன்று என்றால் அது ஜெயசுதவுடையதாக மட்டுமே இருக்க முடியும்), அன்பான, சற்று அதிகப்ரசங்கியான, பெண் குழந்தை என்று க்ஷேமமான, தெளிந்த காவிரி நீர் போன்ற வாழ்க்கை. திடீரென பிள்ளை பிறப்பில் மனைவியின் இழப்பு என்ற ஒரு மாற்ற முடியாத சோகம் அவனது வாழ்வில். தெளிந்த நீர் அங்கே கலங்க தொடங்கி விடுகிறது, ஆனால் இன்னும் மலம் படிந்ததாகவில்லை. If you will let me play pop-psychologist for a second - Denial, Anger, Bargaining, Depression, Acceptance என்ற ஐந்து மன நிலைகளில் நாலாவதில் சிக்கி கிடக்கிறது அவனது மனது. அதை அவ்வளவாக வெளியே காட்டிக்கொள்ளா விட்டாலும், பெண் குழந்தையுடன் புடவை வாங்க செல்லும் பொழுது கண்களின் மூலைகளில் சோகம் எட்டிப்பார்த்துவிடுகிறது. இந்த சமயம் பார்த்து, நாடு விட்டு சென்ற நண்பன் வருகிறான். தான் alpha-dogஆக இருந்த கூட்டத்தில் ஒருவன் தன்னையும் தனது குழந்தையையும் patronize செய்வது அவனுக்கு சற்று உறுத்துகிறது. பிள்ளையின் நலன் கருதி அவன் நகரம் செல்ல எடுக்கும் முடிவில் சற்று ego-vum கலந்து தான் இருக்கிறது. அவன் எடுத்த முடிவை இவ்வாறு அணுகினால் கதையின் கோணமும் பின்பு வரும் பல சமூகக்கோபம் கொண்ட வசனங்களின் அர்த்தமும் மாறி விடுகின்றன. மஹாநதி என்ற திரைப்படம், வெகுளியான நல்லவனுக்கு நேர்ந்திடும் சோகம் என்ற நிலையிலிருந்து, சாதாரண மனித இயல்பு உள்ள நம்மில் ஒருவனுக்கு நேர்ந்திடும் சோகம் என்றாகிவிடுகிறது. To paraphrase one of my favorite lines from Oscar Wilde's "The Importance of Being Earnest" , "Never speak ill of society for only those who cannot get into it do so". "இந்த மாதிரி சாக்கடையா வெச்சுத்தான் அவனவன் நானும் ஒண்ணுக்கு அடிச்சா என்ன கெட்டுடும்?" என்று கேட்க்கும் நிறை குறை உள்ள மனிதன் கிருஷ்ணசுவாமி. அவனுக்கு நடந்த அவலங்களின் தொடக்கம் (துளியளவு தான் என்றாலும்) மாற்ற முடியாத நிகழ்வுகளாலும், அவனது ego-விலிருந்தும் பிறந்ததை அவன் மறந்து விட்டான். இது அன்றாடம் காணப்படும் ஒன்று - பழி பரிமாற்றம் தடம் புரண்ட கோபம் ஆவது (transference of blame that turns into misplaced social anger). அந்த தெளிந்த நீர் க்ரிஷ்ணச்வாமியின் முதல் மனநிலை என்றால் கலங்கிய கூவம் அவனது இன்றைய மனநிலை. ஆகவே கூவமும் காவிரியும் க்ரிஷ்ணஸ்வமியே!
Freeze Frame #143: Baasha
57 minutes ago
4 comments:
Very, very interesting take on the movie. I would've thought that characters like that of the villain are the impurities that tarnished the clear stream of Kamal's life.
IITG: But then theethum nandrum ... This is a sort-of-mining for subtext that I do in movies that I enjoy watching over and over again (however gut-wrenching they are).
The nick's a nonsequitur reference to a new writing instrument bought on eBay to substitute for the one I loaned (or lost?) last year.
Naan Mahanadhi engira arumaiyaana padaththai innum paarkavillai. Thamizhil ingu ivvalavu arumaiyaai ezhudhi irikkum kurippugalai ezhuththu kootti padikarthukulla enakku porum ponrum endru aagivittaalum, it was well worth it. (Hindi yai second language aagu yeduththu kondu naan ennatha saadhichchen, endrallam pala murai yosiththadhu undu. But thanks to Nannan of Vaazhkai Kalvi fame and several years in hostel reading mom's letters, I consider myself somewhat safe from the sorrows of self-inflicted guilt -- always preferred counting my blessings to blaming my bunglings.)
Your last line reminded me of something I've been tossing around in my head lately. I'm generally not for mixing metaphors, breaking the language code of ethic, etc. but I guess when you start with the premise that A+B=Sea, then all bets come off. A world of possibilities open up, wherein you can use A & B interchangeably -- for they're essentially parts of the same whole and hence imbued/interwoven with the same skeins of meaning. Then by mixing metaphors, you're actually augmenting the alchemy of the whole as opposed to debasing the individual. All in my opinion, obviously.
e-bay kanda Puthumai Pen: Mahnathi-yendra nalla padaththai neram kidaikkum bothu ellaam paarungal pala primaanangaL theriyum. If I mxed metaphors in this post I did it unwittingly this was just an agglomeration of thoughts I wanted to put down before the winds of time withered and blew them away.
Post a Comment